சென்னை சென்டிரல் ரெயில் நிலையம் அருகே கல்லூரி மாணவர்கள் மீது கொலைவெறி தாக்குதல்: 3 பேர் கைது

இந்த சம்பவத்துடன் தொடர்புடைய சரத்குமார், பிரகதீஷ், புவனேஸ்வரன் ஆகிய 3 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.

சென்னை சென்டிரல் ரெயில் நிலையம் அருகே கல்லூரி மாணவர்கள் மீது கொலைவெறி தாக்குதல்:  3 பேர் கைது
Published on

சென்னை

சென்னை சென்டிரல் ரெயில் நிலையம் அருகே கல்லூரி மாணவர்கள் மீது தாக்குதல் நடந்த சம்பவத்தில் 3 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.

சென்னை பச்சையப்பன் கல்லூரியை சேர்ந்த மாணவர்கள் 2 பேர் நேற்று காலை சென்டிரல் ரெயில் நிலையம் அருகே மெட்ரோ சுரங்கப்பாதை வழியாக பூங்கா ரெயில் நிலையம் சென்று கொண்டிருந்தனர்.

அப்போது 15-க்கும் மேற்பட்ட மாணவர்கள் அடங்கிய கும்பல், திடீரென அவர்கள் இருவரையும் வழிமறித்து சரமாரியாக கத்தியால் தாக்கியது. தலை, கழுத்து, உடல் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வெட்டு காயத்துடன் 2 மாணவர்களும் கீழே மயங்கி விழுந்தனர்.

இதனை பார்த்த பயணிகள் அலறி அடித்து ஓட்டம் பிடித்தனர். ரத்தகாயங்களுடன் கிடந்த 2 மாணவர்களையும் பெரியமேடு போலீசார் மீட்டு ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

3 பேர் கைது

இதுகுறித்து பெரியமேடு போலீசார் விசாரணை நடத்தினர். மாணவர்கள் மோதலில் காயம் அடைந்த ஒரு மாணவரின் பெயர் நிதீஷ்குமார் (வயது 19) இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். மற்றொரு மாணவர் பெயர் ஹேமந்த் குமார் (வயது 17) முதலாம் ஆண்டு படித்து வருகிறார்.

இந்த சம்பவத்துடன் தொடர்புடைய சரத்குமார், பிரகதீஷ், புவனேஸ்வரன் ஆகிய 3 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். இவர்கள் 3 பேரும், தாக்கப்பட்ட மாணவர்கள் படித்த அதே கல்லூரியை சேர்ந்த மாணவர்கள் என்றும் ரூட் தல விவகாரத்தில், யார் பெரிய நபர் என்பது தொடர்பாக இந்த சம்பவம் நடந்துள்ளது என்றும் கூறப்படுகிறது.

இந்த தாக்குதலில் தொடர்புடைய மற்றவர்களை தேடும் பணி நடந்து வருகிறது. எனினும், மாணவர்களின் இந்த மோதலுக்கான உண்மையான காரணம் என்ன? என்பது பற்றி தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com