மதுரையில் நடைபெறும் முருக பக்தர்கள் மாநாடு அரசியலுக்கு அப்பாற்பட்டது: கவர்னர் ஆர்.என். ரவி

நமது கலாச்சாரம், பண்பாட்டின் அடையாளம் முருகப்பெருமான்” என தமிழக ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார்.
மதுரையில் நடைபெறும் முருக பக்தர்கள் மாநாடு அரசியலுக்கு அப்பாற்பட்டது: கவர்னர் ஆர்.என். ரவி
Published on

மதுரை,

மதுரை பாண்டி கோவிலில் உள்ள அம்மா திடலில் நாளை இந்து முன்னணி சார்பில் முருக பக்தர்கள் மாநாடு நடைபெற்றது. இதில் முக்கிய தலைவர்கள், ஆன்மீக வாதிகள், அரசியல் கட்சியினர், பக்தர்கள் கலந்து கொள்ள உள்ளனர். இந்த நிலையில் மதுரை வந்திருந்த தமிழக கவர்னர் ரவி முருக பக்தர்கள் மாநாட்டு திடலுக்கு வந்தார். அவருக்கு பூரண கும்ப மரியாதை அளிக்கப்பட்டது.

பின்னர் முதற்படை வீடான திருப்பரங்குன்றம் முருகன் கோவில் அருங்காட்சி யகத்திற்குச் சென்ற தமிழக ஆளுநர் அங்கு சாமி தரிசனம் செய்யும்போது முருகப்பெருமானுக்கு தீபாராதனை காண்பித்து வழிபட்டார். இதனை தொடர்ந்து திருச்செந்தூர், பழனி, சுவாமி மலை, திருத்தணி ஆகிய அறுபடை வீடு அருட்காட்சியகத்தில் சென்று வழிபட்டார்.

அங்கு கூடியிருந்த பக்தர்க ளுக்கு கைகொடுத்து வரவேற்று தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.அறுபடை வீடுகள் முன்பாக புகைப்படம் எடுத்துக் கொண்ட ஆளுநர் ரவி தொடர்ந்து பக்தர்களை பார்த்து கையசைத்த வண்ணம் தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறுகையில், அறுபடை வீடுகளையும் ஒரே இடத்தில் பார்ப்பது மகிழ்ச்சியாக உள்ளது. இது அரசியல் அப்பாற்பட்ட நிகழ்ச்சியாக உள்ளது. இந்து முன்னணி அமைப்பி னருக்கு நன்றி என்றார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com