போலீசாரால் தாக்கப்பட்டு முருகேசன் என்பவர் உயிரிழந்த விவகாரம்- எஸ்.ஐ.பெரியசாமி சஸ்பெண்ட்

சேலம் ஏத்தாப்பூர் அருகே சோதனைச்சாவடியில் போலீசாரால் தாக்கப்பட்டு முருகேசன் என்பவர் உயிரிழந்தார்.
போலீசாரால் தாக்கப்பட்டு முருகேசன் என்பவர் உயிரிழந்த விவகாரம்- எஸ்.ஐ.பெரியசாமி சஸ்பெண்ட்
Published on

சேலம்,

கொரோனா தொற்று காரணமாக தளர்வுகளுடன் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி,மதுக்கடைகள் திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஆனால்,கொரோனா பரவல் அதிகம் உள்ள 11 மாவட்டங்களில் மதுக்கடைகளை திறப்பதற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

இதன்காரணமாக, சேலம் மாவட்டத்தில் உள்ள வாழப்பாடியில் மளிகை கடை வைத்து நடத்தி வரும் முருகேசன் என்பவர் தருமபுரிக்கு மது வாங்க சென்று விட்டு திரும்பிய போது ஏத்தாப்பூர் அருகே சோதனைச்சாவடியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த காவலர்கள் முருகேசனை மடக்கி லத்தியால் அடித்துள்ளனர்.

இதனால் தலையின் பின்புறம் பலத்த காயமடைந்த முருகேசன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் ,இன்று காலை முருகன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனையடுத்து,முருகேசனின் உயிரிழப்புக்கு காரணமான சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் பெரியசாமி கைது செய்யப்பட்டார்.

அவர் மீது கொலை வழக்கும் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டது. இந்நிலையில், காவல் உதவி ஆய்வாளர் பெரியசாமி சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.அவரிடம் விசாரணை நடத்திய சேலம் சரக டிஐஜி மகேஸ்வரி,அதற்கான உத்தரவை பிறப்பித்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com