சென்னை விமானநிலையத்தில் இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு உற்சாக வரவேற்பு

சென்னை விமானநிலையத்தில் இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
சென்னை விமானநிலையத்தில் இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு உற்சாக வரவேற்பு
Published on

அமெரிக்காவில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள பிரபல இசையமைப்பாளர் இளையராஜா சென்று இருந்தார். இந்த நிலையில் மாநிலங்களவை எம்.பி.யாக சமீபத்தில் நியமிக்கப்பட்டார். இதையடுத்து பல்வேறு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு விட்டு அமெரிக்காவில் இருந்து துபாய் வழியாக நேற்று சென்னை திரும்பினார். சென்னை விமான நிலையம் வந்த இளையராஜாவுக்கு உற்சாக வரவேற்பு கொடுக்கப்பட்டது.

அப்போது, பா.ஜ.க. சார்பில் தேசிய மகளிர் அணி தலைவி வானதி சீனிவாசன், தமிழக சட்டமன்ற பா.ஜ.க. குழு தலைவர் நயினார் நாகேந்திரன் எம்.எல்.ஏ.க்கள் காந்தி, சரஸ்வதி உள்பட பா.ஜ.க. நிர்வாகிகள் சால்வை அணிவித்து பூங்கொத்து தந்து வரவேற்றனர். மேலும் தமிழ் திரைப்பட இயக்குனர் பாரதிராஜா, கங்கை அமரன், ஆர்.கே.செல்வமணி மற்றும் சினிமா இசைக்கலைஞர்கள் சங்கம், ரசிகர்கள் சார்பாக அவர்களுக்கு பாராட்டு தெரிவித்து வரவேற்பு அளிக்கப்பட்டது.

புதிதாக அறிவிக்கப்பட்ட நியமன எம்.பி.க்கள் நேற்று முன்தினம் பதவி ஏற்று கொண்ட நிலையில், இளையராஜா அமெரிக்காவில் இருந்தால் பதவி ஏற்கவில்லை. டெல்லியில் மழைக்கால கூட்டத்தொடர் நடந்து வருவதால் விரைவில் அவர் டெல்லி சென்று பதவியேற்பார் என கூறப்படுகிறது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com