

கூடலூர்,
நபிகள் நாயகம் குறித்து அவதூறாக பேசிய பா.ஜ.க. நிர்வாகிகளை கண்டித்தும், அவர்களை தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்ய வலியுறுத்தியும் கூடலூர் இஸ்லாமிய ஒருங்கிணைந்த கூட்டமைப்பு சார்பில், கூடலூர் பழைய பஸ் நிலையம் காந்தி சிலை முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் நபிகள் நாயகம் குறித்து அவதூறாக பேசிய பா.ஜ.க நிர்வாகிகளை கண்டித்தும், மத்திய அரசை கண்டித்தும் கோஷங்கள் எழுப்பப்பட்டது. இதில் நிர்வாகிகள் முகமது ஹாஜி, அஸ்ரத், காதர் தாவூத், கமரூதீன் பார்கவி மற்றும் பலர் கலந்துகொண்டனர்.