நாமக்கல்லில்முஸ்லிம் அமைப்பினர் ஆர்ப்பாட்டம்

நாமக்கல்லில்முஸ்லிம் அமைப்பினர் ஆர்ப்பாட்டம்
Published on

கடந்த சில மாதங்களாக மணிப்பூர் மற்றும் அரியானா மாநிலங்களில் கிறிஸ்தவர்கள், முஸ்லிம்கள் மற்றும் பழங்குடியின மக்கள் மீது தொடர்ச்சியாக நடைபெறும் வன்முறை சம்பவங்களை கண்டித்தும், அதை தடுக்க தவறிய அம்மாநில அரசுகளையும், மத்திய பா.ஜனதா அரசையும் கண்டித்து நாமக்கல் மாவட்ட ஐக்கிய ஜமாத் பேரவை மற்றும் முஸ்லிம்கள் அமைப்புகள் சார்பில் கலெக்டர் அலுவலகம் அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு நாமக்கல் மாவட்ட ஐக்கிய ஜமாத் பேரவை தலைவர் தவுலத்கான் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் முகமது முபீன் வரவேற்று பேசினார். இதில் காங்கிரஸ், தி.மு.க., விடுதலை சிறுத்தைகள், இந்திய கம்யூனிஸ்டு கட்சி, ம.தி.மு.க., எஸ்.டி.பி.ஐ., இந்திய யூனியன் முஸ்லிம் லீக் உள்ளிட்ட கட்சிகளின் பிரதிநிதிகள், கிறிஸ்தவ அமைப்புகளின் நிர்வாகிகள் கலந்து கொண்டு பேசினர். முடிவில் நாமக்கல் மாவட்ட ஐக்கிய ஜமாத் பேரவை பொருளாளர் பஷீர் அகமது நன்றி கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com