வக்பு சட்டம்: அனைத்து கட்சிகளும் ஒன்று சேர்ந்து போராடினால் வழக்கு பலம் பெறும் - ஆதவ் அர்ஜுனா

இந்திய சராசரியைவிட இஸ்லாமியர்களின் கல்வித்தகுதி குறைவு என்று ஆதவ் அர்ஜுனா தெரிவித்துள்ளார்.
வக்பு சட்டம்: அனைத்து கட்சிகளும் ஒன்று சேர்ந்து போராடினால் வழக்கு பலம் பெறும் - ஆதவ் அர்ஜுனா
Published on

சென்னை,

தமிழக வெற்றிக் கழக தேர்தல் பிரச்சார மேலாண்மை பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா இன்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.

அப்போது அவர் கூறியதாவது:-

வக்பு சட்டத்தால் இஸ்லாமிய மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். மத்திய அரசு பல்வேறு திட்டங்களை கொண்டு வந்தாலும் இஸ்லாமியர்கள் பின் தங்கி உள்ளனர்.

இந்திய சராசரியைவிட இஸ்லாமியர்களின் கல்வித்தகுதி குறைவு. 2005-இல் ராஜேந்திர சர்தார் கமிட்டி இஸ்லாமியரது பொருளாதார ஏற்றத்தாழ்வுகள் குறித்து அறிக்கை வெளியிட்டுள்ளது.

வக்பு சட்டம் தொடர்பாக த.வெ.க. சார்பில் சுப்ரீம்கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. வக்பு மசோதாவுக்கு சட்டமன்றத்தில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டதை த.வெ.க. வரவேற்றது.

வக்பு சட்டத்திற்கு எதிராக விசிக தலைவர் திருமாவளவனும் தொடர்ந்து குரல் கொடுக்க வேண்டும். தமிழக அரசு அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும். இந்த விவகாரத்தை வாக்கு வங்கியாக அணுகக் கூடாது

அனைத்து கட்சிகளும் ஒன்று சேர்ந்து போராடினால் வழக்கு பலம் பெறும். கேரள அரசு எப்படி இந்த வழக்கில் தன்னை இணைத்துக் கொண்டதோ, அதேபோல் தமிழக அரசும் தன்னை இணைத்துக் கொள்ள வேண்டும்

மக்கள் பிரச்சினைகளுக்காக அனைவரும் ஒன்றிணைந்து குரல் கொடுக்க வேண்டும்.

இவ்வாறு ஆதவ் அர்ஜுனா கூறினார். 

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com