வெளியில் செல்லும்போது முகக்கவசம் அணிய வேண்டும்: அமைச்சர் மா.சுப்பிரமணியன் வலியுறுத்தல்

தமிழ்நாட்டில் ஓரிலக்க அளவில் கொரோனா பாதிப்புகள் இருக்கிறது. இந்த நிலையில், புதிதாக ஜே.என்.1 என்கின்ற வைரஸ் இந்தியாவில் பரவலாக பரவி வருகிறது.
வெளியில் செல்லும்போது முகக்கவசம் அணிய வேண்டும்: அமைச்சர் மா.சுப்பிரமணியன் வலியுறுத்தல்
Published on

சென்னை,

சென்னை எழும்பூர் நலவாழ்வு மற்றும் குடும்ப நல பயிற்சி மையத்தில் நேற்று, தமிழ்நாடு மாநில எய்ட்ஸ் கட்டுப்பாடு சங்கத்தின் சார்பில் 'உலக எய்ட்ஸ் தினம் 2023' நிகழ்ச்சி நடந்தது. இதில் பங்கேற்ற மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நிருபர்களிடம் கூறியதாவது:-

தமிழ்நாட்டில் ஓரிலக்க அளவில் கொரோனா பாதிப்புகள் இருக்கிறது. இந்த நிலையில், புதிதாக ஜே.என்.1 என்கின்ற வைரஸ் இந்தியாவில் பரவலாக பரவி வருகிறது. ஜே.என்.1 என்ற வைரஸ் 4 பேருக்கு கண்டறியப்பட்டது. இந்த 4 பேரும் திருச்சி, மதுரை, கோவை, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

இந்த வைரஸ் குறித்து பெரிய அளவில் அச்சப்பட வேண்டியதில்லை. பொது சுகாதாரத்துறை சார்பில் கடந்த 10 நாட்களுக்கு முன்பு அறிவிப்பு வெளியிடப்பட்டது. அதில், கர்ப்பிணி தாய்மார்கள், வயதானவர்கள், இணை நோய் உள்ளவர்கள் வெளியில் செல்லும்போது முகக்கவசம் அணிந்து செல்ல வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. எனவே, அதனை கடைபிடித்தால் வைரஸ் பாதிப்புகள் அதிகமாவதற்கு வாய்ப்புகள் இல்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com