முத்தால்வாழியம்மன் கோவில் தேர் திருவிழா

ராகவன்பேட்டை முத்தால்வாழியம்மன் கோவில் தேர் திருவிழா நடைபெற்றது.
முத்தால்வாழியம்மன் கோவில் தேர் திருவிழா
Published on

விழுப்புரம்

முத்தால்வாழியம்மன் கோவில்

விழுப்புரம் அருகே ராகவன்பேட்டை பகுதியில் மிகவும் பிரசித்தி பெற்ற முத்தால்வாழியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் வைகாசி மாதம் தேர் திருவிழா வெகுவிமரிசையாக நடைபெறுவது வழக்கம். அதுபோல் இந்த ஆண்டுக்கான தேர் திருவிழா கடந்த 25-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து, காத்தவராயன் சாமி வீதியுலா, சாகை வார்த்தல், திருக்கல்யாண வைபவம், பூங்கரக ஊர்வலம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றது அதுபோல் ஒவ்வொரு நாளும் இரவு 9 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு சாமி வீதி உலா நிகழ்ச்சி நடைபெற்றது.

தேர் திருவிழா

இதனை தொடர்ந்து விழாவின் முக்கிய நிகழ்வாக தேர் திருவிழா நடந்தது. இதையொட்டி அலங்கரிக்கப்பட்ட தேரில், முத்தால்வாழியம்மன் சிறப்பு மலர் அலங்காரத்தில் எழுந்தருளினார். இந்த தேரை ஏராளமான பக்தர்கள் வடம்பிடித்து இழுத்தனர். இத்தேரானது, ராகவன்பேட்டை பகுதியின் முக்கிய வீதிகள் வழியாக சென்று மீண்டும் கோவிலை வந்தடைந்தது. அதன் பிறகு அம்மனுக்கு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். பக்தர்கள் அனைவருக்கும் பிராசாதம் வழங்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை ராகவன்பேட்டை பகுதி மக்கள் செய்திருந்தனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com