கி.வீரமணி வேகமாக குணமடைய வேண்டும் முத்தரசன் விருப்பம்

கி.வீரமணி வேகமாக குணமடைய வேண்டும் முத்தரசன் விருப்பம்.
கி.வீரமணி வேகமாக குணமடைய வேண்டும் முத்தரசன் விருப்பம்
Published on

சென்னை,

இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாநில செயலாளர் முத்தரசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

திராவிடர் கழக தலைவர்கி.வீரமணியும், அவரது மனைவி மோகனாவும் கொரோனா தொற்று பாதிப்பால் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப் பெற்று சிகிச்சை பெற்று வருகிறார்கள் என்ற செய்தி மிகுந்த கவலையளித்தது.

நோய்த் தடுப்பு முறைகளை எச்சரிக்கையோடு கடைப்பிடித்து வந்தும், வெளியூர் சென்று, திரும்பிய ரெயில் பயணத்தால் பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது என்பதை கருத்தில் கொண்டு, முக கவசம் அணிதல் உள்பட அனைத்துத் தடுப்பு முறைகளையும் அனைவரும் கட்டாயம் கடைப்பிடித்து வர வேண்டும் என வலியுறுத்துகிறோம்.

சிகிச்சை பெற்று வரும் கி.வீரமணி - மோகனா இருவரும் பரிபூரணமாக குணமடைந்து, இயல்பு வாழ்க்கைக்கு விரைந்து திரும்ப வேண்டும் என இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக் குழு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறது.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com