முத்துமாரியம்மன் கோவில் மண்டல பூஜை நிறைவு விழா

உம்பளச்சேரி முத்துமாரியம்மன் கோவில் மண்டல பூஜை நிறைவு விழா
முத்துமாரியம்மன் கோவில் மண்டல பூஜை நிறைவு விழா
Published on

வாய்மேடு:

தலைஞாயிறை அடுத்த உம்பளச்சேரியில் உள்ள முத்துமாரியம்மன் கோவிலில் மண்டல பூஜை நிறைவு விழா நடைபெற்றது. அதை முன்னிட்டு சிறப்பு யாகம் நடந்தது. முன்னதாக முத்து மாரியம்மனுக்கு பால், பன்னீர், இளநீர், சந்தனம், நெய், தேன், திரவியம் உள்ளிட்டவைகளால் அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் வண்ண மலர்களால் மாரியம்மன் அலங்கரிக்கப்பட்டு மகாதீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். 

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com