ரூ.18 லட்சத்துக்கு மாடுகள் விற்பனை

ரூ.18 லட்சத்துக்கு மாடுகள் விற்பனை
Published on

பழையகோட்டை மாட்டுத்தாவணியில் ரூ.18 லட்சத்துக்கு மாடுகள் விற்பனை செய்யப்பட்டது.

மாட்டுத்தாவணி

நத்தக்காடையூர் அருகே உள்ள பழையகோட்டை மாட்டுத்தாவணியில் உலகிலேயே வீரத்திற்கும், கம்பீரத்திற்கும் புகழ் பெற்ற காங்கயம் இன காளைகள் விற்பனை சந்தை வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்று வருகிறது.

இதன்படி நேற்று நடைபெற்ற சந்தையில் திருப்பூர், ஈரோடு, கரூர், நாமக்கல், கோவை, திருச்சி, திண்டுக்கல் உட்படபல்வேறு மாவட்டங்களை சேர்ந்த காங்கயம் இன காளைகள் வளர்ப்போர்கள், நாட்டு மாடுகளை வளர்க்கும் விவசாயிகள், காங்கயம் இன காளை பராமரிப்பு விருத்தியாளர்கள் கலந்து கொண்டனர். அவர்கள் பெரிய பூச்சி காளைகள், இளம் பூச்சி காளைகள், செவலை பசுமாடுகள், மயிலை பூச்சி காளைகள், மயிலை பசுமாடுகள், மயிலை கிடாரிகள், காராம்பசு கிடாரி கன்றுகள் என விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர்.

சந்தையில் விற்பனைக்காக கொண்டு வரப்பட்ட மொத்தம் 85 காங்கயம் இன பசுமாடுகள், காளைகள், கன்றுகளில் மொத்தம் 50 மாடுகள் ரூ.18 லட்சத்துக்கு விற்பனை செய்யப்பட்டது.

அதிகபட்சமாக காளை கன்றுடன் காங்கயம் இன காரி மயிலை பசுமாடு ரூ.81 ஆயிரத்திற்கு விற்பனை செய்யப்பட்டது.

வியாபாரிகள்

சந்தையில் திருப்பூர், ஈரோடு, திருச்சி, கரூர், கோவை, திண்டுக்கல், நாமக்கல் மாவட்டங்களை சேர்ந்த காங்கயம் இன காளைகள், மாடுகள் வளர்க்கும் விவசாயிகள், வியாபாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com