

சென்னை,
ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைகளுக்காக குரல் கொடுத்தவர் முத்துராமலிங்க தேவர் என ‘வீ த லீடர்ஸ்’ கட்சியின் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்ட எக்ஸ் பதிவில் தெரிவித்திருப்பதாவது :-
ஆன்மீகமும், தேசிய உணர்வும் சமூகப் பற்றும் ஒருங்கே கொண்ட தெய்வத் திருமகனார் ஐயா பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் அவர்களின் குருபூஜை தினம் இன்று. சுதந்திரப் போராட்ட வீரராகவும், ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைகளுக்காகக் குரல் கொடுத்த மக்கள் தலைவராகவும் விளங்கியவர் ஐயா பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர்.
தன்னலமற்ற பொதுவாழ்வு, அஞ்சாத நெஞ்சம், உறுதியான கொள்கைப்பற்று, தெய்வ பக்தி ஆகியவற்றின் அடையாளமாகத் திகழ்ந்த தேவர் பெருமகனாரின் வாழ்க்கை வருங்காலத் தலைமுறையினருக்கு என்றும் வழிகாட்டியாக இருக்கும்.
இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.