''என் குழந்தைகளுக்கு ஸ்பைடர் மேன், சூப்பர் மேன் தெரியாது 'அனுமான்'தான் தெரியும்'' - நமீதா


My children dont know Spider-Man or Superman, they only know Jai Hanuman - Namitha
x

வேலூர் மாவட்டம் குடியாத்தத்தில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் இன்று யோகா நிகழ்ச்சி நடைபெற்றது.

வேலூர்,

சர்வதேச யோகா தினத்தையொட்டி வேலூர் மாவட்டம் குடியாத்தத்தில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் இன்று யோகா நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த விழாவில், சிறப்பு விருந்தினராக பாஜக நிர்வாகி நமீதா கலந்துகொண்டார்.

பள்ளி மாணவ, மாணவியர் உள்பட நூற்றுக்கும் மேற்பட்டோர் இதில் கலந்துகொண்டு யோகா செய்தனர். பின்னர் பேசிய நமீதா,

"யோகா 5,000 ஆண்டுகள் பழமையானது. நடிகை கரீனா கபூர் யோகா மூலம் உடலைக் கட்டுப்பாட்டோடு வைத்தபின் தான் யோகா பற்றி அனைவருக்கும் தெரிய வந்தது. அனைவரும் யோகா செய்யுங்கள். அது மனதிற்கும் உடலுக்கும் நல்லது.

என் குழந்தைகளோடு நான் வீட்டில் ஆங்கிலத்தில் பேசுவது இல்லை. என் தாய் மொழியில்தான் பேசுவேன். ஆங்கிலம் தெரிந்தால் நல்லதுதான். ஆனால் அதற்கு முன் கண்டிப்பாக தாய்மொழி முக்கியம். என் குழந்தைக்கு ஸ்பைடர் மேன், சூப்பர் மேன் எல்லாம் தெரியாது, ஜெய் அனுமன்தான் தெரியும். இதை நான் பெருமையாக தெரிவித்துக்கொள்கிறேன்" என்றார்.


1 More update

Next Story