பூக்கும் புன்னகை ஒவ்வொன்றிலும் மனம் நிறைகிறேன்- முதல் அமைச்சர் மு.க ஸ்டாலின்

முதல் அமைச்சர் மு.க ஸ்டாலின் தனது வலைதள பதிவில், மாளவிகா ஐயர் என்பவரின் பதிவை பகிர்ந்து பூக்கும் புன்னகை ஒவ்வொன்றிலும் மனம் நிறைகிறேன் என்று பதிவிட்டுள்ளார்.
பூக்கும் புன்னகை ஒவ்வொன்றிலும் மனம் நிறைகிறேன்- முதல் அமைச்சர் மு.க ஸ்டாலின்
Published on

சென்னை,

சமூக சேவகர், மனித உரிமை பேராளி, மாடல் என பன்முகத் திறமைகளை கொண்டவர் மாளவிகா ஐயர். இவர் சிறு வயதில், குண்டு வெடிப்பினால் பாதிக்கப்பட்டு இரண்டு கைகளையும் இழந்தார். கடந்த 2020 ஆம் ஆண்டு மகளிர் தினத்தில், பிரதமர் மோடியின் ட்விட்டர் கணக்கை ஒருநாள் நிர்வகிக்கும் பொறுப்பு 7 சாதனைப் பெண்களுக்கு வழங்கப்பட்டது. அதில் ஒரு சாதனைப் பெண்தான் இந்த டாக்டர் மாளவிகா ஐயர்.

இவர் தனது எக்ஸ் தளத்தில், தமிழக அரசின் விலையில்லா பொங்கல் சேலையில் விலை மதிப்பில்லாத புன்னகையுடன் உங்கள் மாளவிகா! பொங்கல் பண்டிகை ஒவ்வொருவரின் மனதில் மகிழ்ச்சியையும் உடலில் உற்சாகத்தையும் கொண்டு வரட்டும்" என பதிவிட்டு இருந்தார். இவரது பதிவை குறிப்பிட்டுள்ள முதல் அமைச்சர் மு.க ஸ்டாலின், "பூக்கும் புன்னகை ஒவ்வொன்றிலும் மனம் நிறைகிறேன்" என்று பதிவிட்டுள்ளார்.

தமிழக அரசின் விலையில்லா பொங்கல் திட்டம் குறித்த நெகிழ்ச்சியை வெளிப்படுத்தும் விதமாக முதல் அமைச்சர் மு.க ஸ்டாலின், மாளவிகா ஐயரின் பதிவை பகிர்ந்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com