அஜித்குமாருக்கு என் மனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துகள் - நயினார் நாகேந்திரன்

அஜித்குமார் நீண்ட ஆயுளுடன் வாழ இறைவனை மனமாறப் பிரார்த்திப்பதாக நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
அஜித்குமாருக்கு என் மனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துகள் - நயினார் நாகேந்திரன்
Published on

சென்னை,

'அமராவதி'யில் ஆரம்பித்து 'காதல் மன்னன்', 'ஆசை', 'அமர்க்களம்' என தொடர்ந்து 'குட் பேட் அக்லி' வரை 60க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் அஜித்குமார். இவர் நடிகர் மட்டுமல்லாமல் கார் பந்தயவீரரும் கூட. 'குட் பேட் அக்லி' படத்திற்கு பிறகு கார் ரேசிங்கில் அதிக கவனம் செலுத்தி வரும் இவர், ‘அஜித்குமார் ரேசிங்’ என்ற தனது சொந்த பந்தய அணியையும் தொடங்கி பல்வேறு தொடர்களில் வெற்றி பெற்று இந்தியாவிற்கு பெருமை சேர்த்து வருகிறார்.

இந்த நிலையில், நடிகர் அஜித்குமார் இன்று தனது 55வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். அவருக்கு திரைப்பிரபலங்கள், அரசியல் பிரபலங்கள், ரசிகர்கள் என பல்வேறு தரப்பினரும் பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் அஜித்திற்கு வாழ்த்து தெரிவித்து தனது எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது, ”தன்னம்பிக்கை, உறுதியான முயற்சி, மற்றும் அயராத உழைப்பின் மூலம் உயர்ந்து, எண்ணற்ற ரசிகர்களின் மனங்களில் தனித்த இடம் பிடித்துள்ள பத்ம பூஷன் அஜித்குமாருக்கு என் மனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

திரைத்துறையைத் தாண்டி, பல்வேறு துறைகளில் தனது திறமையை வெளிப்படுத்தி, இந்தியாவின் பெருமையை உலகம் முழுவதும் எடுத்துச் செல்லும் அவர், இனியும் அவர் மேற்கொள்ளும் ஒவ்வொரு முயற்சியும் மாபெரும் வெற்றிகளாக மலர்ந்து, நல்ல ஆரோக்கியத்துடன், மகிழ்ச்சி மற்றும் வளம் நிரம்பிய நீண்ட ஆயுளுடன் வாழ இறைவனை மனமாறப் பிரார்த்திக்கிறேன்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com