தமிழிசை சௌந்தரராஜனுக்கு எனது மனமார்ந்த பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் - எல் முருகன்

வாழ்வில் மேலும் பல வெற்றிகளும், சாதனைகளும் கிட்ட எனது இதயம் கனிந்த வாழ்த்துக்கள் என எல் முருகன் தெரிவித்தார்.
தமிழிசை சவுந்தரராஜன்,எல் முருகன்
Published on

சென்னை,

மருத்துவர்

கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோயிலில் ஜூன் 2, 1961-ஆம் ஆண்டு குமரி அனந்தன், கிருஷ்ணகுமாரி ஆகியோருக்கு மகளாக பிறந்தார். சென்னை மருத்துவ கல்லூரியில் மருத்துவ படிப்பை படித்து முடித்தார். சௌந்தரராஜன என்பவரை மணந்தார். இவருடைய கணவரும் ஒரு மருத்துவர் ஆவார். இவர்களுக்கு சுகநாதன் என்னும் மகன் உள்ளார்.

முதல் பெண் தலைவர்

பாரதிய ஜனதா கட்சியின் தமிழ்நாடு தலைவர், மாநில பொதுச்செயலாளர், துணைத்தலைவர், தேசிய செயலாளர் உள்ளிட்ட பொறுப்புகளை வகித்துள்ளார். இவரே பாரதிய ஜனதா கட்சியின் தமிழ்நாடு மாநில தலைவராக பொறுப்பு வகித்த முதல் பெண் ஆவார். தெலுங்கானா மாநில கவர்னரும் புதுச்சேரி துணைநிலை கவர்னர் ஆகவும் இருந்துள்ளர்.

மத்திய இணை மந்திரி எல்.முருகன் தனது எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது:-

பிறந்தநாள்

இன்று, பிறந்தநாள் காணும் முன்னாள் தமிழக பாஜக மாநில தலைவரும், முன்னாள் தெலுங்கானா கவர்னருமான அன்பு சகோதரி டாக்டர் தமிழிசை சௌந்தரராஜனுக்கு எனது மனமார்ந்த பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்.

முருகப்பெருமானின் அருள்

தமிழிசை சௌந்தரராஜன் நீண்ட ஆயுள், நல்ல ஆரோக்கியம் மற்றும் அனைத்து வளங்களும் பெற்று, மக்கள் பணியில் தொடர்ந்து சிறப்பாக செயல்பட எல்லாம் வல்ல முருகப்பெருமானின் அருள் என்றும் துணையாக இருக்கட்டும். வாழ்வில் மேலும் பல வெற்றிகளும், சாதனைகளும் கிட்ட எனது இதயம் கனிந்த வாழ்த்துக்கள்.

இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com