

சென்னை,
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் ரிவித்திருப்பதாவது;-
தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் சட்டமன்றத் தேர்தல் வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்பட்டுள்ள இந்த முக்கியமான தருணத்தில், அறிவிக்கப்பட்ட அனைத்து வெற்றி வேட்பாளர்களுக்கும் என் மனமார்ந்த வாழ்த்துகள்.
இந்த வாய்ப்பை மக்கள் சேவைக்கான ஒரு பெரிய பொறுப்பாகக் கொண்டு, நேர்மை மற்றும் அர்ப்பணிப்புடன் செயல்படுவீர்கள் என்ற நம்பிக்கை உள்ளது.
மக்கள் நலனையும், சமூக நீதி மற்றும் முன்னேற்றத்தையும் முன்னிறுத்தி, இந்திய கூட்டணி கட்சியினர் அனைத்துத் தொகுதியிலும் வெற்றி பெற என் இதயம் கனிந்த நல்வாழ்த்துகள்.
நமது வெற்றி தமிழ்நாட்டின் சுயாட்சிக்கும், முன்னேற்றத்திற்கும் மற்றும் வளர்ச்சிக்கும் புதிய பாதையை உருவாக்கட்டும்!
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.