கிறிஸ்துவ பெருமக்கள் அனைவருக்கும் எனது இதயம் நிறைந்த நல்வாழ்த்துகள் - டி.டி.வி.தினகரன்


கிறிஸ்துவ பெருமக்கள் அனைவருக்கும் எனது இதயம் நிறைந்த நல்வாழ்த்துகள் - டி.டி.வி.தினகரன்
x

கோப்புப்படம்

உலகம் முழுவதும் இன்று கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது.

சென்னை,

அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது,

அன்பான வார்த்தைகளாலும், அன்பான வாழ்க்கையாலும், உலகை ஆட்கொண்ட அருள்நாதர் இயேசுபிரான் அவதரித்த நாளை கிறிஸ்துமஸ் பெருவிழாவாக கொண்டாடி மகிழும் அனைவருக்கும் எனது மனமார்ந்த கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

அன்பின் திருவுருவமாகவும். ஒட்டுமொத்த கருணையின் மறுவடிவமாகவும், மக்கள் அனைவரிடத்திலும் அன்பு பாராட்டிய இயேசுபிரான் போதித்த அன்பு, எளிமை, கருணை போன்ற உயரிய நற்குணங்களை பின்பற்றி சகோதரத்துவத்துடனும், ஒற்றுமையாகவும் வாழ்ந்திட நாம் அனைவரும் இந்நாளில் உறுதியேற்போம்.

மக்களின் நல்வாழ்வுக்காகவே அவதரித்த இயேசுபிரானை கொண்டாடி மகிழும் இந்நாளில் மக்கள் அனைவரது வாழ்விலும் நலமும் வளமும் பெருகட்டும் என உலகெங்கிலும் வாழும் கிறிஸ்துவ பெருமக்கள் அனைவருக்கும் மீண்டும் ஒருமுறை எனது இதயம் நிறைந்த கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துகளை உரித்தாக்குகிறேன். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


1 More update

Next Story