"என் கணவரை காணவில்லை" - பிரபல நடனக் கலைஞரின் மனைவி பரபரப்பு புகார்

தனது கணாவரை காணவில்லையென பிரபல நடனக்கலைஞரின் மனைவி பரபரப்பு புகாரை அளித்துள்ளார்.
"என் கணவரை காணவில்லை" - பிரபல நடனக் கலைஞரின் மனைவி பரபரப்பு புகார்
Published on

சென்னை,

தனியார் தொலைக்காட்சி ஒன்றில், நடன நிகழ்ச்சியில் அசத்தி வரும் நடனக் கலைஞர் ரமேஷ், கடந்த 4 நாட்களாக காணவில்லை என அவரது மனைவி இன்பவள்ளி, சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.

கடந்த 11ஆம் தேதி, குமார், ரஞ்சித், ஜெய், ராஜ்குமார் ஆகியோர், ரமேஷை ஷுட்டிங்கிற்கு அழைத்துச் சென்றதாகவும், பின்னர் வீடு அவர் வீடு திரும்பவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.

மேலும், ரமேஷின் முதல் மனைவி எனக் கூறி, சித்ரா என்பவர் ரமேஷை கடத்தி வைத்துள்ளதாகவும், தனக்கு அடியாட்கள் மூலம் கொலை மிரட்டல் விடுவதாகவும் அந்த புகார் மனுவில் இன்பவள்ளி குறிப்பிட்டுள்ளார். இதுதொடர்பாக சென்னை புளியந்தோப்பு காவல்நிலைய போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com