

சென்னை,
மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் நிழலாக 19 ஆண்டுகள் வலம் வந்த பூங்குன்றன், தற்போது அதிமுக தரப்பிலிருந்து வரும் விமர்சனங்களுக்குத் தனது முகநூல் பக்கத்தில் 'எமோஷனல்' கலந்த பதிலடி கொடுத்துள்ளார்.
அம்மாவின் சொத்துக்களையே என் பெயரில் எழுதும் அளவுக்கு அவர் என் மீது நம்பிக்கை வைத்திருந்தார்; நினைத்திருந்தால் அந்தச் சொத்துக்களுக்கு நான்தான் வாரிசு என்று உரிமை கொண்டாடி இருக்கலாம், ஆனால் இயக்கத்தின் நலனுக்காக ஒதுங்கி நின்றேன்" என அதிரடி கிளப்பியுள்ளார்.
தனது விசுவாசம் தந்தையிடமிருந்து வந்த ரத்த மரபு என்றும், சாவிலும் அம்மாவின் ஆன்மாவுக்குத் துரோகம் செய்ய மாட்டேன் என்றும் குறிப்பிட்டுள்ள அவர், "என் அருமை காலம் சொல்லும்" என விமர்சகர்களுக்குச் சவால் விடுத்துள்ளார்.
சொத்துக்கள் தன் பெயரில் இருப்பதால் உயிருக்கு ஆபத்து இருப்பதாகக் கூறியுள்ள பூங்குன்றன், தன்னைத் துரோகி என்பவர்கள் முதலில் ஜெயலலிதாவுக்குச் சிகிச்சை அளித்த மருத்துவரிடம் உண்மை என்னவென்று கேட்டுத் தெரிந்துகொள்ளட்டும் என 'நையாண்டி' கலந்த டோனில் உண்மையை உடைப்பதாகக் கூறி முடித்துள்ளார்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.