இரட்டை இலை சின்னத்திற்கே எனது ஆதரவு - ஜான்பாண்டியன் பேட்டி

இரட்டை இலை சின்னத்திற்கே எனது ஆதரவு என ஜான்பாண்டியன் கூறியுள்ளார்.
இரட்டை இலை சின்னத்திற்கே எனது ஆதரவு - ஜான்பாண்டியன் பேட்டி
Published on

சென்னை,

ஈரோடு கிழக்கு தொகுதிக்கு பிப்27-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் அதிமுக போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் அதிமுக சார்பில் ஈரோடு இடைத்தேர்தலில் தாங்கள் போட்டியிடுவதாக ஓ.பன்னீர்செல்வம் இன்று காலை தெரிவித்தார்.

இதனால் அதிமுக மூத்த நிர்வாகிகள் தலைமை அலுவலகத்தில் திடீர் ஆலோசனை நடத்தினார். இதனை தொடர்ந்து தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத் தலைவர் ஜான் பாண்டியனை சந்தித்து ஆலோசனை நடத்தினர். அதில் முன்னாள் அமைச்சர்கள் கே.பி. முனுசாமி, ஜெயக்குமார், தங்கமணி, திண்டுக்கல் சீனிவாசன், செங்கோட்டையன் பங்கேற்றனர்.

இந்த சந்திப்பின் முடிவில் ஜான் பாண்டியன் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில்,

அதிமுகவின் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடுபவர்களுக்கு மட்டுமே ஆதரவு. ஈரோடு இடைத்தேர்தலில் ஓ.பி.எஸ், ஈ.பி.எஸ் இணைந்து போட்டியிட வேண்டும். ஓபிஎஸ், ஈபிஎஸ் இடையே நிலவும் உட்கட்சி விவகாரத்தில் தலையிட விரும்பவில்லை என்று கூறினார்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com