தமிழர்கள் அனைவருக்கும் எனது தமிழ்ப்புத்தாண்டு நல்வாழ்த்துகள் - டிடிவி தினகரன்

மாற்றங்களையும், ஏற்றங்களையும் தரும் ஆண்டாக அமையட்டும் என இறைவனைப் பிரார்த்திப்பதாக டிடிவி தினகரன் தெரிவித்தார்.
தமிழர்கள் அனைவருக்கும் எனது தமிழ்ப்புத்தாண்டு நல்வாழ்த்துகள் - டிடிவி தினகரன்
Published on

சென்னை,

அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது;-

சித்திரை மாதத்தின் முதல் நாளை தமிழ்ப்புத்தாண்டாக மகிழ்ச்சியோடும், உற்சாகத்தோடும் கொண்டாடி மகிழும் உலகெங்கும் வாழும் தமிழர்கள் அனைவருக்கும் எனது தமிழ்ப்புத்தாண்டு நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

பாரம்பரியமிக்க பழமையிலும், தொன்மையிலும், பன்முகத் தன்மையிலும் ஈடு இணையற்ற பண்பாட்டுப் பெருமைமிக்க தமிழ் மக்கள் அனைவரும் இணைந்து வரவேற்கும் இந்த தமிழ்ப்புத்தாண்டு, மக்கள் அனைவருக்கும் நல்ல மாற்றங்களையும், புதிய ஏற்றங்களையும் தரும் ஆண்டாக அமையட்டும் என எல்லாம்வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.

மலரும் தமிழ்ப்புத்தாண்டு தமிழக மக்களின் உள்ளத்திலும் எண்ணத்திலும் புதிய நம்பிக்கையையும், உத்வேகத்தையும் அளிக்கும் ஆண்டாக அமைவதோடு, அனைவரின் வாழ்விலும் வளம் பெருகி, வசந்தம் மலர்ந்து, அன்பு மேலோங்கி, அமைதி நிலவும் ஆண்டாகவும் அமையட்டும் எனக்கூறி உலகெங்கிலும் உள்ள தமிழ் மக்கள் அனைவருக்கும் எனது தமிழ்ப்புத்தாண்டு நல்வாழ்த்துகளை மீண்டும் ஒருமுறை உரித்தாக்கிக் கொள்கிறேன்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com