

புதுச்சேரி,
புதுச்சேரியில் சட்டசபை தேர்தலுக்கான வாக்குப்பதிவு வருகிற 9-ந் தேதி நடைபெற உள்ளது. தேர்தலுக்கு இன்னும் 3 நாட்கள் உள்ளநிலையில் புதுவையில் தேர்தல் பிரசாரம் சூடு பிடித்துள்ளது. இந்த நிலையில் தேர்தல் போட்டி களத்தில் குதித்துள்ள வேட்பாளர்கள் வீதி வீதியாக சென்று தீவிர ஓட்டு வேட்டையில் ஈடுபட்டு உள்ளனர். அவர்களை ஆதரித்து அந்தந்த கட்சி தலைவர்களும், முக்கிய நிர்வாகிகளும் சூறாவளி பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.
இந்த நிலையில் புதுச்சேரி மேட்டுப்பாளையம் பகுதியில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டிருந்தபோது, அங்கு திரண்டிருந்த தமிழக வெற்றி கழக தொண்டர்கள் டிவிகே, டிவிகே என கோஷமிட்டனர். இதனால் சீமான் மற்றும் நாம் தமிழர் கட்சியினர் கடும் கோபமடைந்தனர்.
சீமான் தனது பிரசார வாகனத்தில் இருந்து தவெக தொண்டர்களிடம் நோக்கி டீ விக்கிறியா? இங்க வந்து டீ வித்துட்டு போடா என்று வாக்குவாததில் ஈடுபட்டார். இதனை தொடர்ந்து நாம் தமிழர் கட்சியினர், கோஷமிட்ட நபரை நோக்கி பாய்ந்து அவரை தாக்க முயன்றனர்.
அப்போது தனது உரையை தொடர்ந்த சீமான், நாம் தமிழர் தம்பிகள் அறிவார்ந்த பிள்ளைகள் என்றும், கோஷமிட்ட தவெக தொண்டர்களை தற்குறிகள் மற்றும் கோமாளிகள் என்றும் கடுமையாக விமர்சித்த சீமான்.
இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.