மயில்சாமி மறைவு திரையுலகிற்கு பேரிழப்பு- தெலுங்கானா கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் இரங்கல்

நகைச்சுவை நடிகர் மயில்சாமி மாரடைப்பால் இன்று அதிகாலை மரணம் அடைந்தார்.
மயில்சாமி மறைவு திரையுலகிற்கு பேரிழப்பு- தெலுங்கானா கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் இரங்கல்
Published on

ஐதராபாத்,

நகைச்சுவை நடிகர் மயில்சாமி மாரடைப்பால் இன்று அதிகாலை மரணம் அடைந்தார். மயில்சாமியின் திடீர் மறைவு அவரது ரசிகர்களுக்கு கடும் அதிர்ச்சியை அளித்துள்ளது. மயில்சாமியின் மறைவுக்கு திரையுலகத்தினர் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில், மயில்சாமி மறைவுக்கு புதுவை துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் இரங்கல் தெரிவித்துள்ளார். அவர் கூறியுள்ளதாவது:-

நகைச்சுவை நடிகர் மயில்சாமி அவர்கள் உடல்நலக்குறைவால் உயிரிழந்த செய்தியை அறிந்து மிகுந்த மன வேதனை அடைந்தேன். கட்சி எல்லைகள் கடந்து நட்பு பாராட்டியவர்.விருகம்பாக்கம் பகுதி மக்களுக்கு பல சமூக சேவைகளை செய்துள்ளார்.மேலும் சமூக அக்கறை சார்ந்த கருத்துக்களை தனது நகைச்சுவை நடிப்பின் மூலம் மக்களிடம் எடுத்துச் சென்று மக்களின் மனதில் நீங்கா இடம் பிடித்தவர்.அவரது மறைவு திரையுலகிற்கு பேரிழப்பாகும்.அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும்,நண்பர்களுக்கும்,ரசிகர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும்,ஆறுதலையும் தெரிவித்துக்கொள்கிறேன்" என்று தெரிவித்துள்ளார்

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com