கபாலீஸ்வரர் கோயில் அதிகாரியின் கார் டிரைவர் சடலமாக மீட்பு

கோவிலுக்கு சொந்தமான திருமண மண்டபத்தில் கார் டிரைவர் தூக்கிட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

மைலாப்பூர்,

சென்னை மைலாப்பூரில் உள்ளது பிரசித்தி பெற்ற கபாலீஸ்வரர் கோயில். இந்த கோவிலின் இணை ஆணையர் காவேரி. இவரின் கார் டிரைவராக பணியாற்றியவர் ஜெயச்சந்திரன்.

அதே பகுதியில் திருக்கோவிலுக்கு சொந்தமான திருமண மண்டபம் ஒன்று உள்ளது. அந்த திருமண மண்டபத்தில் ஜெயச்சந்திரன் உடலை தூக்கு மாட்டிய நிலையில் சக ஊழியர்கள் நேற்று மீட்டுள்ளனர்.

அவரது உடலை மருத்துவமனைக்கு சக ஊழியர்கள் கொண்டு சென்றுள்ளனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர்.

இது குறித்து தகவல் அறிந்து வந்த காவல்துறையினர் அவரது உடலை பிரதே சோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

முதல் கட்ட விசாரணையில் ஜெயச்சந்திரன் அடிக்கடி மது அருந்துவார் எனவும் சமீப காலமாக அவர் மன அழுத்தத்தில் இருந்ததாகவும் தெரியவந்துள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com