

ஆரல்வாய்மொழி,
குமாரி மாவட்டம் தோவாளை தேவர் நகர் பகுதியில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி உள்ளது. அதன் அருகிலேயே ஏ.டி.எம் மையமும் உள்ளது. எப்போது ஆட்கள் நடமாட்டம் உள்ள பகுதி அது. இன்று காலையில் வாடிக்கையாளர் ஒருவர் பணம் எடுக்க அம்மையத்திற்கு சென்றுள்ளார்.
அப்போது ஏடிஎம் எந்திரத்தின் வெளிப்புற கண்ணாடி உடைந்து இருந்து உள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர், வங்கி ஊழியர்களுக்கு தகவல் தெரிவித்து உள்ளார். அவர்கள் ஆரல்வாய்மொழி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் ஏ.டி.எம் மையத்தில் வைக்கபட்ட சி.சி.டி.வி கேமிராவின் பதிவுகளை ஆய்வு செய்தனர். அதில் நேற்று முன்தினம் இரவு 8.20 மணிக்கு சட்டை இல்லாமல் தாடி வளர்ந்த நிலையில் சுமார் 45 வயது மதிக்க தக்க ஒருவர் உள்ளே செல்கிறார்.
பணம் எடுக்க கையில் ஏ.டி.எம்.கார்டோ, அல்லது பணம் போட கையில் பணமோ இல்லை சிறிது நேரம் எந்திரத்தையே உற்று நோக்குகிறார். பின்னர் எந்திரத்தின் பின்னால் செல்கிறார். இரண்டு நிமிடம் கழித்து அங்கிருந்து கையில் கொஞ்சம் ஒயரோடு வருகிறார்.
அதை தரையில் ஓங்கி அடிக்கிறார். பிறகு ஏ.டி.எம் எந்திரத்தை மீண்டும் உற்று நோக்குகிறார். பிறகு கதவை திறந்து வாசலில் சில நொடி பொழுது நின்றுவிட்டு இறங்கி அருகில் கிடந்து கல்லை எடுத்து கண்ணாடி மீது எறிகிறார். அதில் கண்ணாடி சுக்குநூராகு உடைகிறது. இது முழுவதும் அதில் பதிவாகியிருந்தது.
இந்த நிலையில் தோவாளையில் உடலில் சிராய்ப்பு காயத்துடன் நின்ற ஒருவரை ஆம்புலன்ஸ் மூலம் சிலர் ஆசாரிபள்ளம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த நபர்தான்.சி.சி.டி.வி பதிவில் உள்ளவர் என தெரியவந்தது உள்ளது.
அவர் மனநலம் பாதிக்கப்பட்ட நபரா, இல்லை போதை ஆசாமியா, அல்லது கொள்ளை அடிக்க வந்தவரா என்ற கோணங்களில் போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர்.