பேரூராட்சி அலுவலகத்தில் மோட்டார் சைக்கிள் திருடிய மர்ம ஆசாமி...!

ஆரல்வாய்மொழி பேரூராட்சி அலுவலகத்தில் மோட்டார் சைக்கிளை திருடிய மர்ம ஆசாமியால் பரபரப்பு ஏற்பட்டது.
பேரூராட்சி அலுவலகத்தில் மோட்டார் சைக்கிள் திருடிய மர்ம ஆசாமி...!
Published on

குமரி,

குமரி மாவட்டம் ஆரல்வாய்மொழி பேரூராட்சி அலுவலகத்தில் குடிநீர் பணியாளராக முருகன் (வயது42) என்பவர் பணியாற்றி வருகின்றார்.

இவர் தனது மோட்டார் சைக்கிளை காலை 11 மணிக்கு பேரூராட்சி அலுவலத்தின் வளாகத்தில் நிறுத்திவிட்டு சாவியை எடுக்காமல் அலுவலகத்திற்குள் சென்று உள்ளார்.

பின்னர், சிறிது நேரத்தில் வெளியே வந்து பார்த்தபோது அவருடைய மோட்டார் சைக்கிள் மாயமானது கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதனை தொடர்ந்து அவர், அலுவலகத்தில் பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி பதிவுகளை ஆய்வு செய்தார்.

அதில், 25 வயது கொண்ட வாலிபர் ஒருவர் அலுவலகத்தின் வாயிலில் அங்குமிங்கும் அலைவதும், பின்னர் வேகமா வந்து மோட்டார் சைக்கிளை எடுத்துவிட்டு தப்பி செல்வது பதிவாகி இருந்தது.

இதுகுறித்து முருகன் கொடுத்த புகாரின் பேரில் ஆரல்வாய்மொழி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com