விசாரணை கைதிகள் மர்ம மரணங்கள்: தமிழக அரசு உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் - தேமுதிக தலைவர் விஜயகாந்த்..!

விசாரணை கைதிகள் மர்ம மரணங்கள் விவகாரத்தில் தமிழக அரசு உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் கூறியுள்ளார்.
கோப்புப் படம்
கோப்புப் படம்
Published on

சென்னை,

தேமுதிக தலைவர் விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

விசாரணை கைதி விக்னேஷ் கொலை வழக்கில் அயனாவரம் சரக உதவி ஆணையர் சரவணன், தலைமை செயலக காலனி காவல் ஆய்வாளர் செந்தில்குமார் ஆகியோரை பணியிட மாற்றம் செய்தால் மட்டும் போதாது.

கடுமையான தண்டனை வழங்கினால் மட்டுமே எதிர்காலத்தில் விசாரணை கைதிகளின் மர்ம மரணம் தடுக்கப்படும். இல்லையென்றால் இதுபோன்ற மரணங்கள் தொடர்ந்து நடைபெற்று கொண்டுதான் இருக்கும்.

விசாரணை கைதிகள் மர்ம மரணங்கள் விவகாரத்தில் காவல்துறை உயர் அதிகாரிகளும், தமிழக அரசும் உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையென்றால் வேலியே பயிரை மேய்ந்ததற்கு சமமாகிவிடும்.

என்று கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com