நெல்லையில் பரவும் மர்ம காய்ச்சல் - 2 பேர் உயிரிழப்பு...!

நெல்லையில் பரவும் மர்ம காய்ச்சலுக்கு 2 பேர் உயிரிழந்து உள்ளனர்.
நெல்லையில் பரவும் மர்ம காய்ச்சல் - 2 பேர் உயிரிழப்பு...!
Published on

நெல்லை,

நெல்லை மாநகராட்சி பகுதியில் கொரோனா தோற்று வெகுவாக குறைந்து சகஜ நிலை திரும்பி உள்ளது. இந்த நிலையில் தற்போது பலருக்கும் திடீரென்று மர்ம காய்ச்சல் ஏற்பட்டு வருகிறது. இந்த காய்ச்சலால் பதிக்கப்பட்டவர்கள் பகல் நேரங்களில் நன்றாக இருப்பதாகவும், மாலை மற்றம் இரவு நேரங்களில் இந்த காய்ச்சல் அதிகரிப்பதாகவும் கூறப்படுகின்றது.

பின்னர் தலைசுற்றல், தலைவலி, மயக்கம் போன்ற பாதிப்புகள் ஏற்படுகிறது. தற்போது இந்த பாதிப்புடன் பலர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

இந்த நிலையில் இந்த மர்ம காய்ச்சலுக்கு நெல்லை மாநகராட்சி பகுதியில் 2 பேர் உயிரிழந்து உள்ளனர்.

அதில் மேலப்பாளையம் ராஜா நகரைச் சேர்ந்த மாடசாமி மனைவி சத்யா (26) என்பவர் வீட்டு வேலை செய்து கொண்டிருந்தபோது திடீரென்று மயங்கி விழுந்துள்ளார். அவரை மீட்டு உறவினர்கள் மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழதுள்ளார்.

இதுபோன்று பாளையங்கோட்டை உருத்திரபசுபதி நாயனார் தெருவை சேர்ந்த முருகன் (வயது 58) என்பவர் மார்க்கெட்டிற்கு நடந்து சென்ற போது மயங்கி விழுந்துள்ளார். பின்னர் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

இந்த பாதிப்புடன் மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்துவருவதால் சுகாதார துறை அதிகாரிகள் மருத்துவமனையில் ஆய்வு செய்து வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com