சிவகாசியில் பத்திரிக்கையாளர் மீது மர்ம நபர்கள் கொலைவெறி தாக்குதல்

சிவகாசியில் பத்திரிக்கையாளர் மீது மர்ம நபர்கள் நடத்திய கொலைவெறி தாக்குதல் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
சிவகாசியில் பத்திரிக்கையாளர் மீது மர்ம நபர்கள் கொலைவெறி தாக்குதல்
Published on

சிவகாசி,

இன்று வெளியான குமுதம் ரிப்போர்ட்டர் இதழில் அமைச்சர் ஒருவருக்கும், சாத்தூர் சட்டமன்ற உறுப்பினருக்கும் இடையே உட்கட்சி பிரச்சனை நிலவுவதாக செய்தி வெளியாகி இருந்தது.

இந்நிலையில் அந்த இதழின் விருதுநகர் மாவட்ட செய்தியாளர் கார்த்தி இன்று (செவ்வாய்க்கிழமை) இரவு சிவகாசியில் மர்ம நபர்களால் தாக்கப்பட்டார். இந்த கொடூர தாக்குதலுக்குள்ளான செய்தியாளர், தற்போது சிவகாசி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தமிழகத்தில் தொடர்ந்து பத்திரிகையாளர்கள் தாக்கப்படும் செயல்கள் அதிகரித்து வரும் அவல நிலையை கவனத்தில் கொண்டு, தமிழக முதலமைச்சர் நேரடியாக இந்த விவகாரத்தில் தலையிட்டு பத்திரிகையாளர் பாதுகாப்பை உறுதி செய்யவேண்டும் என்று சென்னை பத்திரிகையாளர் மன்றம் வலியுறுத்தி உள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com