அடகு கடையின் சுவரை ஓட்டை போட்டு கொள்ளையடித்த மர்மநபர்கள்...!

மரக்காணத்தில் அடகு கடையின் சுவரில் ஓட்டை போட்டை ரூ. 2 லட்சம் மதிப்பிலான பொருட்களை மர்மநபர்கள் கொள்ளையடித்து உள்ளனர்
அடகு கடையின் சுவரை ஓட்டை போட்டு கொள்ளையடித்த மர்மநபர்கள்...!
Published on

மரக்காணம்,

விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே உள்ள அனுமந்தை பகுதியில் சந்தாராம் (வயது51) என்பவர் அடகு கடை வைத்து நடத்தி வருகிறார். இவர் நேற்று இரவு வழக்கம் போல் 7 மணிக்கு கடையை மூடிவிட்டு வீட்டிற்கு சென்றுள்ளார்.

இந்நிலையில் இன்று காலை கடையை திறக்க சந்தாராம் வந்துள்ளார். அப்போது கடையின் பின்புறம் உள்ள சுவரில் ஓட்டை போட்டு மர்ம நபர்கள் கொள்ளையடித்தது தெரியவந்து.

இந்த கொள்ளை சம்பவத்தின் போது கடையில் இருந்த லாக்கரை உடைக்க முடியாததால் உள்ளே இருந்த டி.வி, பிரிண்டர், 2 சி.சி.டிவி கேமிரா உள்ளிட்ட ரூ 2 லட்சம் மதிப்பிலான பொருட்கள் கொள்ளை அடித்துச் சென்று உள்ளனர்.

இது குறித்து சந்தாராம் மரக்காணம் போலீஸ் நிலையத்திற்கு தகவல் கொடுத்தார். இந்த தகவலின் பேரில் மரக்காணம் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினர்.

இந்த கொள்ளை சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்த போலீசார், கொள்ளையர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com