ஆட்டோவை திருடிய மர்ம நபர்கள்

ஆண்டிப்பட்டி அருகே ஆட்டோவை மர்ம நபர்கள் திருடி சென்றனர்.
ஆட்டோவை திருடிய மர்ம நபர்கள்
Published on

ஆண்டிப்பட்டி மேலத்தெருவை சேர்ந்தவர் ராஜ்குமார் (வயது 30). ஆட்டோ டிரைவர். இவர் வாடகைக்கு ஆட்டோ ஓட்டி வருகிறார். இவர் இரவு நேரத்தில் ஆண்டிப்பட்டியை அடுத்த சக்கம்பட்டியில் உள்ள ஒரு பெட்ரோல் விற்பனை நிலையம் அருகே ஆட்டோவை நிறுத்திவிட்டு செல்வது வழக்கம். நேற்று முன்தினம் இரவு ராஜ்குமார் வழக்கம் போல ஆட்டோவை நிறுத்திவிட்டு சென்றார். நேற்று காலை வந்து பார்த்தபோது அவருடைய ஆட்டோவை காணவில்லை. இதுகுறித்து ஆண்டிப்பட்டி போலீசில் ராஜ்குமார் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தினர். பின்னர் போலீசார் பெட்ரோல் விற்பனை நிலையம் மற்றும் அந்த பகுதிகளில் பொருத்தி இருந்த கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனர். அதில் ராஜ்குமாரின் ஆட்டோவை 2 மர்ம நபர்கள் திருடிக்கொண்டு வைகை அணை சாலையில் செல்லும் காட்சிகள் பதிவாகி இருப்பது தெரியவந்தது. அதனை துருப்பு சீட்டாக கொண்டு ஆட்டோவை திருடி சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com