மாயமான வாலிபர் பிணமாக மீட்பு

குடியாத்தம் அருகே மாயமான வாலிபர் பிணமாக மீட்கப்பட்டார்.
மாயமான வாலிபர் பிணமாக மீட்பு
Published on

வேலூர் மாவட்டம் குடியாத்தத்தை அடுத்த சேத்துவண்டை கிராமத்தை சேர்ந்தவர் மாறன். இவரது மகன் தர்மலிங்கம் (வயது 32). இவருக்கு திருமணமாகி லாவண்யா என்ற மனைவியும். 2 மகன்களும் உள்ளனர்.

நேற்று முன்தினம் வீட்டில் இருந்து வெளியே சென்ற தர்மலிங்கம் அதன்பிறகு வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சி குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் அவரை தேடினர்.

இந்தநிலையில் நேற்று மதியம் குடியாத்தம் காந்திநகர் மோர்தனா கால்வாய் செல்லும் பகுதியில் உள்ள தென்னந்தோப்பில் தர்மலிங்கம் பிணமாக கிடப்பதாக குடியாத்தம் டவுன் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று தர்மலிங்கத்தின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுதொடர்பாக குடியாத்தம் டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் லட்சுமி, சப்-இன்ஸ்பெக்டர் மணிகண்டன் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com