ரயில் நிலையத்தில் மர்ம பொருள் - வெடிகுண்டு நிபுணர்கள், மேப்பநாய் சோதனை: திண்டுக்கல்லில் பரபரப்பு

சிகப்பு கலரில் உருண்டை வடிவிலான மர்ம பொருள் கிடந்துள்ளது. இதனை பார்த்த அப்பகுதி மக்கள் உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
ரயில் நிலையத்தில் மர்ம பொருள் - வெடிகுண்டு நிபுணர்கள், மேப்பநாய் சோதனை: திண்டுக்கல்லில் பரபரப்பு
Published on

திண்டுக்கல்,

திண்டுக்கல் ரயில் நிலையம் அருகே குட்செட் அருகே உள்ள சாலையில் சிகப்பு கலரில் உருண்டை வடிவிலான மர்ம பொருள் கிடந்துள்ளது. இதனை பார்த்த அப்பகுதி பொதுமக்கள் உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

இதனையடுத்து திண்டுக்கல் நகர் டிஎஸ்பி. கோகுல கிருஷ்ணன் தலைமையில் வெடிகுண்டு நிபுணர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். மேலும் மோப்பநாய் லிசா வரவழைக்கப்பட்டு சேதனை நடத்தப்பட்டது.

சேதனையில் அது பெரிய வடிவில் ஆன ரப்பர் பால் என தெரிய வந்தது. இதனையடுத்து காவல்துறையினர் பந்தை அங்கிருந்து ஆயுதப்படை மைதானத்திற்கு எடுத்துச் சென்றனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com