அரசு பேருந்துகளில் 'தமிழ்நாடு' ஸ்டிக்கர் ஒட்டி நாம் தமிழர் கட்சியினர் போராட்டம்

தூத்துக்குடி புதிய பேருந்து நிலையத்தில் அரசு பேருந்துகளில் தமிழ்நாடு என்ற ஸ்டிக்கர் ஒட்டி நாம் தமிழர் கட்சியினர் போராட்டம் நடத்தினர்.
தூத்துக்குடி
நாம் தமிழர் கட்சியினர் சார்பில் அரசு போக்குவரத்து கழகம் என்ற எழுத்திற்கு முன்பு 'தமிழ்நாடு' என்ற பெயர் இல்லை என்ற கோரிக்கையுடன், தூத்துக்குடி புதிய பேருந்து நிலையத்தில் அரசு பேருந்துகளில் தமிழ்நாடு என்ற ஸ்டிக்கர் ஒட்டி போராட்டம் நடத்தினர்.
இந்த போராட்டத்திற்கு மாநில ஒருங்கிணைப்பாளர் அன்னலட்சுமி தலைமை வகித்தார். இதில் ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர் தமிழ்நேயன் உட்பட கட்சியினர் பலர் கலந்து கொண்டனர். பின்னர் நாம் தமிழர் கட்சி சார்பாக போக்குவரத்து துறை இளநிலை பொறியாளர் அய்யாசாமியிடம் கோரிக்கை மனு கொடுத்து கலைந்து சென்றனர்.
Related Tags :
Next Story






