நாடாளுமன்ற தேர்தலில் நாம் தமிழர் கட்சி தனித்து போட்டியிடும் - சீமான்

நாடாளுமன்ற தேர்தலில் நாம் தமிழர் கட்சி தனித்து போட்டியிடும் என்று சீமான் கூறினார்.
நாடாளுமன்ற தேர்தலில் நாம் தமிழர் கட்சி தனித்து போட்டியிடும் - சீமான்
Published on

நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் புதுக்கோட்டையில் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

பெண்களுக்கு ஆயிரம் ரூபாய் உதவித்தொகை கொடுப்பதில் விதிமுறைகள் இருப்பது மிகப்பெரிய கொடுமை. தேர்தல் நேரத்தில் அறிவித்த போது விதிமுறைகளை அறிவிக்கவில்லை. அப்போது ஏன் சொல்லவில்லை. கர்நாடகாவில் மேகதாது அணை கட்டுவதில் காங்கிரஸ், பா.ஜனதா என 2 கட்சியும் தேர்தல் நேரத்தில் அறிவித்துள்ளது. 2 பேரும் தேர்தல் அறிக்கையில் இதனை அறிவித்துள்ளனர். இதை தெரிந்து தான் அரசியல் கட்சியினர் ஆதரித்தனர்.

கோவை டி.ஐ.ஜி. விஜயகுமார் தற்கொலை செய்ததற்கு காரணம் பணிச்சுமை தான். 6 மாதமாக அவருக்கு விடுமுறை கொடுக்கவில்லை. எனக்கு அவரை தெரியும். நல்ல அறிவாளி, சமூக பற்றுக்கொண்டவர், எல்லாரையும் நேசிக்க கூடியவர். துணிவான அவர் தற்கொலை செய்து கொள்ளக்கூடிய கோழைத்தனமானவர் அல்ல. அவரது தற்கொலை அதிர்ச்சியளிக்க கூடிய வகையில் உள்ளது. டி.ஐ.ஜி. அளவில் உள்ளவர்களே மன அழுத்தம் காரணமாக தற்கொலை செய்கிற நிலை இருக்கிற போது சாதாரண போலீசாரின் நிலையை கூறவா வேண்டும். எனவே போலீசாருக்கு சுழற்சி முறையில் வாரம் ஒருநாள் விடுமுறை விட வேண்டும். 6 மாதத்திற்கு ஒரு முறை குடும்பத்துடன் சுற்றுலா செல்ல அனுமதிக்கலாம். நாடாளுமன்ற தேர்தலில் நாம் தமிழர் கட்சி தனித்து தான் போட்டியிடும். சென்னை மெரினா கடல் பகுதியில் பேனா நினைவு சின்னம் அமைக்க மத்திய அரசு ஒப்புதல் கொடுத்தாலும் நான் உடைப்பேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com