மயிலாடுதுறையில் 3-ந்தேதி நாம் தமிழர் கட்சி பொதுக்கூட்டம் - சீமான் அறிவிப்பு

‘பெரியாரைப் போற்றுவோம்’ என்ற தலைப்பில் நாம் தமிழர் கட்சி பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது.
சென்னை,
மயிலாடுதுறையில் 3-ந்தேதி ‘பெரியாரைப் போற்றுவோம்’ என்ற தலைப்பில் நாம் தமிழர் கட்சியின் பொதுக்கூட்டம் நடைபெற உள்ளதாக அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிவித்துள்ளார். இது தொடர்பாக ‘எக்ஸ்’ தளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது;-
“பெரியாரைப் பேணாது ஒழுகிற் பெரியாரால்பேரா இடும்பை தரும். (குறள் – 892) - பாட்டன் வள்ளுவப் பெருமகனார்.
நாம் தமிழர் கட்சி சார்பாக, வருகின்ற மார்கழி 19 ஆம் நாள் (03-01-2026) மாலை 04 மணியளவில் ‘பெரியாரைப் போற்றுவோம்!’ மாபெரும் பொதுக்கூட்டம், மயிலாடுதுறை, சின்னக்கடைத்தெருவில் பேரெழுச்சியாக நடைபெற இருக்கிறது. மானத்தமிழரெல்லாம் மறக்காமல் கூடுவோம்! நாம் தமிழர்!”
இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.
Related Tags :
Next Story






