திருச்செந்தூரில் டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் மணிமண்டபம்: அமைச்சர் கடம்பூர் ராஜூக்கு நாடார் சங்க நிர்வாகிகள் நன்றி

திருச்செந்தூரில் டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் மணிமண்டப பணிகளை சிறப்பாக மேற்கொண்ட அமைச்சர் கடம்பூர் ராஜூக்கு நாடார் சங்க நிர்வாகிகள் நன்றி தெரிவித்தனர்.
திருச்செந்தூரில் டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் மணிமண்டபம்: அமைச்சர் கடம்பூர் ராஜூக்கு நாடார் சங்க நிர்வாகிகள் நன்றி
Published on

சென்னை,

திருச்செந்தூரில் டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனாருக்கு மணிமண்டபம் அமைக்கப் படும் என்று தூத்துக்குடியில் கடந்த 2017-ம் ஆண்டு நடந்த எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.

அதன்படி திருச்செந்தூர் மாவட்டம் வீரபாண்டியன்பட்டினத்தில் 60 சென்ட் நிலத்தில் ரூ.1 கோடியே 34 லட்சத்து 26 ஆயிரம் மதிப்பில் மணிமண்டபம் அமைக்கப்பட்டுள்ளது. டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் மணிமண்டபத்தை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வருகிற 22-ந்தேதி(சனிக்கிழமை) நேரில் திறந்து வைக்க உள்ளார்.

எனவே முதல்-அமைச்சருக்கு நாடார் சங்கத்தினர் நன்றியையும், பாராட்டுகளையும் தெரிவித்து வருகின்றனர். மணிமண்டப பணிகளை சிறப்பாக மேற்கொண்ட செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூக்கும் நன்றி தெரிவித்து வருகின்றனர்.

இந்தநிலையில் அமைச்சர் கடம்பூர் ராஜூவை ஓய்வு பெற்ற பதிவுத்துறை கூடுதல் தலைவர் ஆறுமுக நயினார், நாடார் சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் மின்னல் ஸ்டீபன், தேசிய நாடார் சங்கத்தின் பொதுச்செயலாளர் டி.விஜயகுமார், தரமணி நாராயணன் நாடார், கடம்பூர் அய்யாத்துரை நாடார், கோட்டூர் கே.குரு நாடார், ரகு பாண்டியன் உள்ளிட்டோர் நேற்று நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com