பெரம்பலூரில் காமராஜர் சிலைக்கு நாடார் சங்கத்தினர் மாலை அணிவித்து மரியாதை

பெரம்பலூரில் காமராஜர் சிலைக்கு நாடார் சங்கத்தினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
பெரம்பலூரில் காமராஜர் சிலைக்கு நாடார் சங்கத்தினர் மாலை அணிவித்து மரியாதை
Published on

பெருந்தலைவர் காமராஜரின் 120-வது பிறந்த நாள் விழா நேற்று தமிழகம் முழுவதும் கொண்டாடப்பட்டது. அதன்படி பெரம்பலூர் மாவட்டத்திலும் காமராஜரின் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. பெரம்பலூர் புதிய பஸ் நிலையம் அருகே உள்ள காமராஜர் சிலைக்கு பெரம்பலூர் மாவட்ட நாடார் உறவினர் முறை சங்கத்தின் பொதுச்செயலாளர் தினகர் தலைமையில், சங்கத்தினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். பின்னர் பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கினர். இதில் சங்கத்தின் பொருளாளர் பால்ராஜ், இளைஞரணி தலைவர் வரதராஜன், நிர்வாகக்குழு உறுப்பினர் பிரபு மற்றும் சங்க நிர்வாகிகள், உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com