நாடார் சரசுவதி பொறியியல் கல்லூரியில் கருணாநிதி பிறந்தநாளையொட்டி மரக்கன்று நடும் விழா

கருணாநிதி பிறந்தநாளையொட்டி நாடார் சரசுவதி பொறியியல் கல்லூரியில் மரக்கன்று நடும் விழா நடந்தது
நாடார் சரசுவதி பொறியியல் கல்லூரியில் கருணாநிதி பிறந்தநாளையொட்டி மரக்கன்று நடும் விழா
Published on

தேனி நாடார் சரசுவதி பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரியில் முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி பிறந்தநாளையொட்டி வனத்துறை, தேனி மேலப்பேட்டை இந்து நாடார்கள் உறவின்முறை இணைந்து மரக்கன்றுகள் நடும் விழா நடந்தது. விழாவில் மாவட்ட கலெக்டர் முரளிதரன், மாவட்ட வன அலுவலர் வித்யா ஆகியோர் கலந்துகொண்டு மரக்கன்றுகள் நடவு செய்தனர். மேலும், அவர்கள் 200-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகளுக்கு மஞ்சள் பை மற்றும் மரக்கன்றுகள் வழங்கினர். இந்த விழாவில் மாவட்ட வருவாய் அலுவலர் சுப்பிரமணியன், உதவி வன பாதுகாவலர் மகேந்திரன், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் தண்டபாணி மற்றும் பலர் கலந்துகொண்டனர். கல்லூரி முதல்வர் மதளைசுந்தரம் வரவேற்றார். விழா ஏற்பாடுகளை கல்லூரி துணை முதல்வர் மாதவன், வேலைவாய்ப்பு அலுவலர் கார்த்திகேயன், நாட்டு நலப்பணித்திட்ட ஒருங்கிணைப்பாளர் பிரதீப் குமார் ஆகியோர் செய்திருந்தனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com