

நாகை,
நாகையில் சீர்காழி அருகே வானகிரியில் கோவில் கும்பாபிஷேகத்தில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். கோவில் திருவிழாவில் வந்திருந்த குடும்பத்தினர் தங்களது குழந்தைகளுக்கு ஐஸ்கிரீம் வாங்கி கொடுத்துள்ளனர்.
இதில், ஐஸ்கிரீம் சாப்பிட்ட 90க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டு உள்ளது. உடனடியாக அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.