

நாகை,
நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் காரைமேடு பகுதியில் வீட்டின் கொல்லைப்புறத்தில் உள்ள ஏரியில் தவறி விழுந்த ஆண் குழந்தை உயிரிழந்தது.
நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் காரைமேடு பகுதியைச் சேர்ந்தவர் வினோத்குமார். இவருடைய 1½ வயது மகன் சாய்யாழ்வின். நேற்று மதியம் வீட்டின் கொல்லைப்புறத்தில் விளையாடிக் கொண்டிருந்தான். அப்போது எதிர்பாராதவிதமாக வீட்டின் பின்னால் உள்ள ஏரியில் குழந்தை தவறி விழுந்தான்.
நீண்ட நேரமாகியும் குழந்தையைக் காணாமல் தேடிய பெற்றோர், ஏரியில் சடலமாக மிதந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். உடனடியாக மீட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள், குழந்தை ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர்.