நாகை: கட்டுப்பாட்டை இழந்து ஆற்றில் கவிழ்ந்த சரக்கு ஆட்டோ - டிரைவர் பலி

வாய்மேடு அருகே கட்டுப்பாட்டை இழந்து சரக்கு ஆட்டோ ஆற்றில் கவிழ்ந்த விபத்தில் டிரைவர் உயிரிழந்தார்.
நாகை: கட்டுப்பாட்டை இழந்து ஆற்றில் கவிழ்ந்த சரக்கு ஆட்டோ - டிரைவர் பலி
Published on

வாய்மேடு,

நாகை மாவட்டம் வாய்மேட்டை அடுத்த மருதூர் ஆண்டியப்பன் காடு பகுதியைச் சேர்ந்த முத்துலிங்கம் மகன் செந்தில்குமார் (வயது 40 ). இவர் சொந்தமாக சரக்கு ஆட்டோ வைத்துள்ளார்.

இந்த நிலையில் செந்தில்குமார் இன்று காலை தனது சரக்கு ஆட்டோவில் சிமெண்ட் மூட்டையை ஏற்றிக்கொண்டு தகட்டூர் கடைத்தெருவில் இருந்து தென்னடார் செல்லும் வழியில் நிலை தடுமாறிய ஆட்டோ சாலையின் வலது புறத்தில் உள்ள முள்ளியாற்றில் கவிழ்ந்து.

இந்த விபத்தில் ஆட்டோவில் சிக்கியிருந்த செந்தில் குமாரை தீயணைப்பு வீரர்கள் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் இவர் ஏற்கெனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். தகவல் அறிந்த போலீசார் உயிரிழந்த செந்தில்குமாரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com