நாகை மீனவர்களை விரைந்து மீட்க வேண்டும்

நாகை மீனவர்களை விரைந்து மீட்க வேண்டும் என முக்குலத்து புலிகள் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.
நாகை மீனவர்களை விரைந்து மீட்க வேண்டும்
Published on

முக்குலத்து புலிகள் கட்சியின் நிறுவன தலைவர் ஆறு.சரவணன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தமிழகத்தை சேர்ந்த மீனவர்கள் எல்லை தாண்டியதாக கூறி இலங்கை கடற்படையால் தாக்கப்படுவதும், சிறைபிடிக்கப்படுவதும் தொடர்ந்து நடக்கிறது. நேற்றுமுன்தினம் நாகை மாவட்டத்தை சேர்ந்த 10 மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது. அவர்களை திரிகோணமலை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்துள்ளனர். மீனவர்களின் கைது தொடர்ச்சியாக நடந்து வருவது கண்டனத்துக்குரியது. மத்திய, மாநில அரசுகள் உரிய நடவடிக்கை எடுத்து நாகை மீனவர்களையும், படகுகளையும் மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இனிவரும் காலங்களில் இது போன்ற சம்பவங்கள் நடக்காமல் தடுக்க மத்திய, மாநில அரசுகள் துரிதமாக நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com