

நாகப்பட்டினம்,
நாகை துறைமுகத்தில் இருந்து இலங்கை காங்கேசன்துறைக்கு சிவகங்கை பயணிகள் கப்பல் வாரத்தில் 6 நாட்கள் இயக்கப்பட்டு வந்தது. பருவநிலை மாற்றம் காரணமாக கடந்த 2025-ம் ஆண்டு நவம்பர் மாதம் முதல் இந்த கப்பல் போக்குவரத்து தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. இந்த நிலையில், இந்த கப்பல் போக்குவரத்து நாகப்பட்டினம் துறைமுகத்தில் இருந்து காங்கேசன்துறைக்கு கடந்த மார்ச் மாதம் 6-ந்தேதி முதல் மீண்டும் தொடங்கப்பட்டது.
இந்த நிலையில் இலங்கை காங்கேசன் துறை - நாகை இடையிலான 'சுபம்' கப்பல் நடுவழியில் எஞ்சின் பழுதாகி நடுக்கடலில் நின்று விட்டது. இதனால் நடுக்கடலில் 7 மணிநேரம் பயணிகள் தவித்தனர். இதன் பின்பு மீட்புப் படகு உதவியுடன் பழுதடைந்த கப்பல் நாகை துறைமுகத்திற்கு இழுத்து வரப்பட்டது. கப்பலில் இருந்த பயணிகளுக்கு உணவு, முறையான காற்றோட்ட வசதி இல்லாததால் மயங்கிய பயணிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.