

சென்னை,
உலக அரங்கில் தமிழர்களின் பெருமையை உயர்த்திய நவநீதம் பிள்ளைக்கு நயினார் நாகேந்திரன் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது;-
தென்னாப்பிரிக்காவில் வாழும் தமிழ் வம்சாவளியைச் சேர்ந்த நவநீதம் பிள்ளை அமைதி மற்றும் சர்வதேச சட்டத்தை மேம்படுத்துவதற்காக ஆற்றிய சிறப்பான பங்களிப்புகளுக்காக அமைதிக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டிருப்பது தமிழர்கள் அனைவருக்கும் பெருமை அளிக்கும் செய்தியாகும்.
மனித உரிமைகளை பாதுகாப்பதிலும், உலக நாடுகளிடையே அமைதியையும் நீதியையும் நிலைநாட்டுவதிலும், சர்வதேச சட்டத்தின் முக்கியத்துவத்தை வலியுறுத்துவதிலும் அவர் மேற்கொண்ட அர்ப்பணிப்புமிக்க பணிகள் உலக அரங்கில் பாராட்டத்தக்கவை. அவரது சாதனை, உலகெங்கிலும் வாழும் தமிழ் மக்களுக்கு பெருமையையும், இளைய தலைமுறையினருக்கு உத்வேகத்தையும் அளிக்கிறது.
உலக அரங்கில் தமிழர்களின் பெருமையை உயர்த்திய நவநீதம் பிள்ளைக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். மனிதநேயம், நீதி மற்றும் உலக அமைதிக்கான அவரது உயரிய பணிகள் தொடர்ந்து சிறக்கவும், மேலும் பல சாதனைகள் படைக்கவும் எனது வாழ்த்துகள்.
இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.