10ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவ-மாணவியருக்கு நயினார் நாகேந்திரன் வாழ்த்து

பொதுத்தேர்வை எவ்வித பதற்றமுமின்றி, பயமுமின்றி மனதை ஒருநிலைப்படுத்தி எதிர்கொள்ளுமாறு மாணவர்களுக்கு அறிவுரை வழங்கினார்.
10ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவ-மாணவியருக்கு நயினார் நாகேந்திரன் வாழ்த்து
Published on

சென்னை,

தமிழகம், புதுச்சேரியில் இன்று 10ம் வகுப்பு பொதுத்தேர்வு தொடங்க உள்ளது. இன்று தொடங்கும் பொதுத்தேர்வு அடுத்த மாதம் 6ம் தேதி வரை நடைபெற உள்ளது. தமிழகத்தில் இத்தேர்வை சுமார் 9 லட்சம் மாணவ, மாணவியர் எழுதுகின்றனர். 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மையங்களில் தேர்வு நடைபெற உள்ளது. இந்நிலையில், 10ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவ, மாணவியருக்கு தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட எக்ஸ் பதிவில்,

‘இன்று பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதப் போகும் அனைத்து மாணவ, மாணவியருக்கும் எனது வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

உங்கள் பல மாத உழைப்பிற்கு வடிகாலாக அமையப் போகும் இந்த பொதுத்தேர்வை எவ்வித பதற்றமுமின்றி, பயமுமின்றி மனதை ஒருநிலைப்படுத்தி எதிர்கொள்ளுமாறு நமது மாணவக் கண்மணிகளை கேட்டுக் கொள்கிறேன்’

இவ்வாறு தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com