தங்கப் பதக்கம் வென்று சாதனை படைத்த தமிழக வீரர் - நயினார் நாகேந்திரன் வாழ்த்து

சோலைராஜ் தர்மராஜின் விளையாட்டுத் திறன், எண்ணற்ற இளம் விளையாட்டு வீரர்களுக்கு உத்வேகமாகத் திகழ்கிறது என நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
நயினார் நாகேந்திரன் வாழ்த்து
Published on: 

சென்னை,

தங்கப் பதக்கம் வென்று சாதனை படைத்த தமிழக வீரர் சோலை தர்மராஜுக்கு நயினார் நாகேந்திரன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்ட எக்ஸ் பதிவில் தெரிவித்திருப்பதாவது :-

ஜப்பானில் நடைபெற்று வரும் பாரா ஆசிய விளையாட்டுப் போட்டிகளில், நீளம் தாண்டுதல் போட்டியில் 7.15 மீட்டர் தூரம் தாண்டி தங்கப் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ள தூத்துக்குடியைச் சேர்ந்த தமிழக வீரர் சோலைராஜ் தர்மராஜுக்கு எனது மனமார்ந்த பாராட்டுகளையும், வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

தனது விடாமுயற்சி, அசாத்திய திறமை மற்றும் தன்னம்பிக்கையால் இந்த மகத்தான வெற்றியைப் பெற்றுள்ள அவரது சாதனை, தமிழகத்திற்கும், இந்தியத் திருநாட்டிற்கும் பெருமை சேர்த்துள்ளது. தடைகளைத் தகர்த்து சாதனை படைக்கும் அவரது விளையாட்டுத் திறன், எண்ணற்ற இளம் விளையாட்டு வீரர்களுக்கு உத்வேகமாகத் திகழ்கிறது.

தொடர்ந்து பல்வேறு சர்வதேசப் போட்டிகளில் பங்கேற்று, மேலும் பல பதக்கங்களை வென்று இந்தியாவின் பெருமையை உலக அரங்கில் உயர்த்திட சோலைராஜ் தர்மராஜுக்கு எனது மனமார்ந்த நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com