தேசிய நல்லாசிரியர் விருதுக்காக தேர்வாகியுள்ள ஆசிரியர்களுக்கு நயினார் நாகேந்திரன் வாழ்த்து

திறமையான மாணவர்களை உருவாக்குவதில் ஆசிரியர்களின் பணி முக்கியமானது என நயினார் நாகேந்திரன் தெரிவித்தார்.
சென்னை,
பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டு இருப்பதாவது;
”இந்திய அரசின் நல்லாசிரியர் விருது பெற்ற திருப்பூர் பாரதியார் அரசு மேல்நிலைப்பள்ளி ஆசிரியர் விஜயலட்சுமி அவர்களுக்கும், மயிலாப்பூர் பி.எஸ். பள்ளி ஆசிரியர் ரேவதி பரமேஸ்வரன் அவர்களுக்கும் எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
திறமையான மாணவர்களை உருவாக்குவதில் உங்களுடைய பணி முக்கியமானது. வலிமையான பாரத தேசத்தை கட்டமைக்கும் மாணவர்களை உருவாக்கும் உங்களுடைய அரும்பணி மென்மேலும் பல உயரங்களைத் தொட, இறைவன் துணை நிற்க வேண்டுகிறேன்.”
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story






